Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , , , / கஜா புயலால் தவிக்கும் மக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் மோகன்!!

கஜா புயலால் தவிக்கும் மக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் மோகன்!!

நடிகர் மோகன், கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.
பிரபல நடிகரான மோகன், கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன், கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இந்த புயல் தாக்குதலில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். 

இதையடுத்து, தமிழக அரசும் தன்னார்வலர்களும் புயல் பாதித்த மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி நிவாரணம் கேட்டது. மேலும், ரூ.5000 கோடியை உடனடி நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.354 கோடியை நிவாரணமாக அறிவித்துள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் கஜா புயலுக்கு இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் புயல் பாதித்த இடங்களுக்கே சென்று உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 80களில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் மோகன் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஜெனரேட்டர்கள், சோலார் விளக்குகள், அரிசி, பருப்பு வகைகள், தார் பாய்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். 


அதுமட்டுமின்றி, வழியில் மின் இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியர்களை பாராட்டி, அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post