Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , , / மதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை

மதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை

பிரபல நடிகை மனீஷா கொய்ராலா தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை பதிவு செய்துள்ளது

மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், ஆனால் புற்றுநோய் பாதிப்பில் மீண்டும் வாழ்வை புரிந்து கொண்டதாக பிரபல நடிகை மனீஷா கொய்ராலா தனது சுயசரிதையில் தெரிவித்துள்ள சம்பவங்கள் பாலிவுட் உலகில் புயலை கிளப்பி வருகிறது. 

90-களின் மத்தியில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மனீஷா கொய்ராலா. இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்து, இங்கேயும் முன்னணி நடிகையாக இருந்தார். 

டிப்பழக்கத்தால் எனக்கு புற்றுநோய் வந்தது- மனம் திறக்கும் மனீஷா

தொடர்ந்து இந்தியன், முதல்வர், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்தார். 

இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. திரைத்துறையிலிருந்து விலகிய இவர், நோய் பாதிப்புக்காக சிகிச்சைகள் மேற்கொண்டு தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது இவர், ஹீல்டு: புது வாழ்வு கொடுத்த கேன்சர்’ என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதை பென்குயின் பதிப்பகம் அச்சிட்டு விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. 
மனீஷா கொய்ராலா சுயசரிதை புத்தகம்

அதில், ’தீராத குடிப்பழக்கத்தினால் தான் எனக்கு கேன்சர் ஏற்பட்டது. நண்பர்கள், முன்னாள் காதலர் என பலரும் எச்சரித்தும் என்னால், குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. கேன்சரால் பாதிக்கப்பட்ட நாட்கள் அவ்வளவு கொடுமையானது என்றாலும், கேன்சர் என் வாழ்க்கையின் பரிசாகவே கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். கேன்சர் பாதிப்பில் இருந்தபோது தான் எதிர்க்கொண்ட சவால்கள் குறித்தும் அந்த புத்தகத்தில் மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார். 


about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment